Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில், நீர் நிரம்பிய 20 லீற்றர் கொள்ளளவுடைய வாளிக்குள் தவறி விழுந்து 14 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

தன்னாமுனை, கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த அக்விவ் விகான் என்ற ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் இன்று காலை சுமார் 11 மணியளவில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததாகவும், இதன்போது தாயார் வீட்டின் கிணற்றடியில் 20 லீற்றர் கொள்ளளவுடைய வாளியில் துணிகளைத் துவைத்து அவற்றைக் காயவைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உறக்கத்திலிருந்து எழுந்த குழந்தை தாயாரைத் தேடி அங்கு சென்றுள்ளது. குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக ஆடைகளை எடுக்க வீட்டினுள் சென்ற தாயார், மீண்டும் திரும்பி வந்தபோது குழந்தை நீர் நிரம்பிய வாளிக்குள் தலைகுப்புற விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, குழந்தையை உடனடியாக மீட்டுத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!
செய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

October 26, 2026
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!
செய்திகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

October 26, 2026
அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!
செய்திகள்

அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

October 26, 2026
ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!
செய்திகள்

ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!

October 26, 2026
பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு
செய்திகள்

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

October 26, 2026
அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!
செய்திகள்

அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!

October 26, 2026
Next Post
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு