Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; ஜனாதிபதி அனுமதி

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; ஜனாதிபதி அனுமதி

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கான அனுமதியினை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(31) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,“ இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டு அலுவலகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு வழி வகைகள் எதுவும் இருக்கிறதா? என யாழ்ப்பாண மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபனிடம் ஜனாதிபதி வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதீபன், “எமது மாவட்ட செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. இருப்பினும் வடக்கு மக்களுக்கு தேவையான ஒரு விடயமாக கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதால் அதற்கான இடத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், திணைக்களத் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த விவகாரம்; லொஹான் ரத்வத்த தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த விவகாரம்; லொஹான் ரத்வத்த தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு