Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்ட நாடு!

ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்ட நாடு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள நாடுகள் பட்டியலில் ரஷ்யாவும் பெலாரஸும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்ட 203 நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவும் பெலாரஸும் இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (International Olympic Committee) அறிவித்தது.

இந்த நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நடுநிலையாளர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி பெறலாம். எனினும், இது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என ஐஓசி தெரிவித்துள்ளது.

அமைதியான போட்டியில் உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பதே ஒலிம்பிக் போட்டிகளின் நோக்கம் என்று ஐஓசி தலைவர் தாமஸ் பாக் கூறினார்.

உலகில் மோதல்கள், பிளவுகள் மற்றும் போர்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒன்றிணைக்கும் சக்தி முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து தடை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. 2022 தடைக்குப் பிறகு இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்கள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும். பாலின சமத்துவம் கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐஓசி தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையில் தீர்வு வழங்க முடியாது; பந்துல குணவர்த்தன!

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையில் தீர்வு வழங்க முடியாது; பந்துல குணவர்த்தன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு