Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் பட்டதாரி ஆன பெண் தற்கொலை!

யாழில் பட்டதாரி ஆன பெண் தற்கொலை!

3 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் 2 ஆம் திகதி இரவு வட்டுக்கோட்டை – சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்ச்சம்பவம், சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 26 வயதான சற்குணரத்தினம் கௌசி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளம் யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் 27 ஆம் திகதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் பட்டமளிப்பு விழா முடிந்து பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். இவ்வாறான நிலையில், நேற்றிரவு தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் அவர்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக யுவதியின் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாய் மற்றும் தந்தை ஆகியோர் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
எரிபொருள் விலையில் மாற்றம்; அறிவித்தது பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விலையில் மாற்றம்; அறிவித்தது பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு