Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிது மலசித குணரத்ன என்ற ‘குடு சலிந்து’விற்கு எதிராகப் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்கு ஆவணங்கள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் கட்டளைச் சட்டம் மற்றும் அழைப்பாணை பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு ஆவணங்கள் காணாமல்போனமை தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளரால் 1 ஆம் திகதி பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘பி’ அறிக்கையினூடாக நீதிமன்றத்திற்குத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பாணந்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்றப் பதிவாளர் பொலிஸில் முறைப்பாடு செய்த மறுநாளே, அதாவது 2 ஆம் திகதி, சந்தேகத்திற்குரிய குறித்த நீதிமன்ற அதிகாரி தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குத் தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் கடமையாற்றும் சந்தேகத்திற்குரிய 07 பெண் ஊழியர்கள் உட்பட சுமார் 10 பேரிடம் பாணந்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

‘குடு சலிந்து’வின் வழிநடத்தலில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான வழக்குக் கோப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்குக் கோப்பு ஆகிய இரண்டுமே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு