Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அருண் ஹேமச்சந்திரா சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட பதிவு

அருண் ஹேமச்சந்திரா சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட பதிவு

2 years ago
in செய்திகள்

ஒரு சாமானியர் இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் தாண்டி இன்று அரியாசனம் இருக்க வேண்டிய இடத்தில் சாமான்ய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்றும் அவர் பெருமைப்படுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி அவர் பதிவிட்ட சமூகவலைத்தளப்பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

‘நான் சரியாக அந்த கொடிக் கம்பத்துக்குப் பின்னால் இருந்த தொகுதியில் நின்றிருந்தேன். அவர் தேசியக் கொடியை ஏற்றிய பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

காரணம் வேறு ஒன்றும் இல்லை. மிகவும் சரளமானது.

ஒரு சாமானிய இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார்.

எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் தாண்டி இன்று அரியாசனம் இருக்க வேண்டிய இடத்தில் சாமான்ய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

இரவு பகல் பாராது அயராது நாட்டிற்காக உழைக்கின்றார். அவரைப் பற்றி மிகவும் நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மாத்திரமே தெரியும் அவர் எவ்வளவு சரளமானவர் என்று. இன்று அவர் மீது சிலர் கொண்டுள்ள வஞ்சம் ஒரு சாதாரண விடயம் அல்ல.

அது ஏழை எளிய அடித்தட்டு வர்க்கத்தின் மீது கொண்டுள்ள வஞ்சம். வர்க்க வஞ்சம்.

இதனை நாம் சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது, கணக்கெடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கவும் முடியாது, நாம் நமது பயணத்தை மேற்கொள்வோம். இதுவொரு நீண்ட பயணம்.

என்னமோ இதுவரைக்கும் அரிசி இறக்குமதி செய்யாத நாடு போல உப்பில் தன் நினைவு கண்ட நாடு போல, எப்படியோ எல்லாம் வசை பாட நினைத்தவர்கள் இன்று இதில் வந்து நிற்பதே யதார்த்தம்.

அனுபவம் இல்லை என்றார்கள், அனுபவசாலிகள் பதுக்கிய பல விடயங்கள் வெளியே வருகின்றன. உலக நாடுகள் உதவாது என்றார்கள்.

நிறுத்தி வைத்த செயல் திட்டங்கள் எல்லாம் மீள ஆரம்பிக்கின்றன. வரிசை யுகம் வரும் என்றார்கள்.

வரிசையில் உதவ பலர் முன் வருகின்றார்கள். இந்த சாமானியனின் ஆட்சியில் இந்த நாடு எழும், மக்கள் வெல்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது – சுனில் வட்டகல

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது - சுனில் வட்டகல

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.