நேபால் நாட்டில் நடைபெற்ற BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியில் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற தனுசனுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (04) மட்டக்களப்பில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
நேற்று (04) திகதி மட்டக்களப் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற ஞா.சிறிநேசன் கலந்து கொண்டு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த தனுசனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கேக் வெட்டி அனைவராலும் வாழ்த்து தெரிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கவடி சங்கமும் புதிய கோட்டமுனை விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.