Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்திற்கு விண்ணப்பிப்பதற்கும் விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (5) நடைபெற்ற அமர்வில்,பிரதமருடனான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பின் உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் பதிலளித்ததாவது,ஜனாதிபதி நிதியத்தின் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்கமைய சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்பம் செய்வதற்கும், பிரதேச சபைகள் ஊடாக நிவாரண நிதியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு புதிய கணினி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

ஏழ்மை ஒழிப்பு, கல்வி மற்றும் மத மேம்பாடு மற்றும் நாட்டுக்கு சேவையாற்றிய தரப்பினருக்கு நிவாரணமளித்தல் மற்றும் நலன்புரி சேவைகளுக்காக ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது.

1978ஆம் ஆண்டு 07ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் நிதியத்தின் தலைவராக ஜனாதிபதியும் நிர்வாக சபையின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது.

ஆனால், கடந்த கால அரசாங்கங்களில் ஜனாதிபதிகளின் நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு சார்பான அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே நிதி வழங்கப்பட்டது. நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது.

இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றுக்கொண்டவர்கள் நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையில் நிதி பெற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே, இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என கூறியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
மட்டக்களப்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி; ஒருவர் கைது

மட்டக்களப்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி; ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு