Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (25) ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

மூன்று நாட்கள் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் ஆறு பீடங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள் உட்பட மொத்தம் 3,398 பட்டதாரிகளுக்கு ஒன்பது அமர்வுகளின் ஊடாக பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா (PC) முன்னிலையிலும், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலும் நடைபெறும் இவ்விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகின்றார்.

முதலாம் நாளான இன்று நடைபெற்ற முதல் அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட மாணவர்களுக்கான பட்டமளிப்பு இடம்பெறவுள்ளது.

இன்றைய விழாவின் விசேட அம்சமாக மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு விசேட உரையாற்றவுள்ளார்.

நாளை (26) நடைபெறும் நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அமர்வுகளில் பிரயோக விஞ்ஞானம் மற்றும் கலை, கலாசாரப் பீட மாணவர்களுக்கும், ஜூலை 27ஆம் திகதி நடைபெறும் இறுதி மூன்று அமர்வுகளில் முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பீடத்தினருக்கும், வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பொறியியல், தொழில்நுட்பவியல், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய அனைத்து பீடங்களையும் உள்ளடக்கிய இம்முறை பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி விரிவாக்கத்தையும் உயர்கல்வித் துறையில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

September 11, 2026
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
செய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!

September 11, 2026
FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

September 11, 2026
Next Post
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

கல்முனையில் ஆரம்பமாகிறது "FIT FOR LIFE CRICKET FIESTA 2026" கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.