Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

1 year ago
in செய்திகள்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்க்கக்கூடிய தீர்வை முன்னெடுக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஐந்து லட்சத்துக்கு அதிகமான மக்களினுடைய விருப்பம் என்னவென்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அந்த வகையில் விகாரை கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றது.

அதில் பூஜை வழிபாடுகளும் தொடர்கின்றது, அன்றைய தினம் பேசாதவர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்காதவர்கள் இன்றைக்கு இதனை பூதாகரமான பிரச்சினையாக எழுப்புவதற்கு முயல்கின்றனர்.

உண்மையிலேயே இதனை இதயசுத்தியுடன் செய்கின்றார்களா அல்லது எதிர்வரும் நாட்களில் இவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் இதனை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயல்கின்றார்களா என்ற கேள்வி எழுகிறது.

மீண்டும் இனவாதத்தை தூண்ட முடியாது, இனவாதத்தை பயன்படுத்தி இலங்கையை பிளவுபடுத்த முடியாது, நாட்டின் அபிவிருத்தியை பற்றி பேச முடியாது.

அபிவிருத்தி துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது இந்தநிலையில், அவர்கள் இனவாத மதவாதத்தை தூண்டி மீண்டும் தங்களை நிலைநாட்டிக் கொள்ள சிலர் முயல்கின்றனர்.

எங்கள் அரசாங்கத்தின் கீழ் இந்த போராட்டங்கள் இடம் பெறுகின்றது, இந்த பிரச்சனைக்கு நாங்கள் மக்களோடு கலந்துரையாடி தீர்வை எட்ட முயல்கிறோம்.

விகாரை சட்டவிரோதமா அல்லது சட்ட ரீதியானது என்பதை வாதங்களாக தனித்தனியான கருத்துக்களை சொல்ல முடியும், விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களுடைய இடம் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

அந்த வகையில் நிச்சயமாக அந்த மக்களுக்கு அதற்குரிய நட்ட ஈடு மற்றும் காணிகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

விகாரையை உடைப்பதன் மூலம் தையிட்டி பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே. ஆகவே சுமூகமான தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்க்கக்கூடிய தீர்வை முன்னெடுக்க கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு
செய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

June 19, 2026
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை
செய்திகள்

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

June 19, 2026
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
Next Post
கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு