Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!

வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!

32 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் வணிகப் பெயர்களைப் பதிவு செய்யும் நடைமுறையை இலகுவாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எளிய மற்றும் ஒருங்கிணைந்த வணிகப் பெயர் பதிவு (BNR) முன்னோடித் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் பங்காண்மை வணிகங்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, நாடளாவிய ரீதியில் ஒரே சீரான பதிவுக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

1918ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய பதிவு முறையில் காணி உரிமை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் நிறுவனங்களின் அனுமதிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால், தொழில்முனைவோர் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

எனினும், புதிய நடைமுறையின் கீழ் வணிகப் பெயர் பதிவு மற்றும் ஏனைய சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறும் செயல்முறைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடையாளச் சான்றுகள் மற்றும் வசிப்பிடத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து நாட்களுக்குள் வணிகப் பதிவை நிறைவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பகட்டமாக மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் மூன்று மாத கால முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், நாடு முழுவதும் இதனை விரிவுபடுத்துவதுடன், எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாகவும் இச்சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புதிய தொழில்களை ஆரம்பிக்க விரும்புவோர் மற்றும் சிறு, நடுத்தர தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் நிர்வாகச் சிக்கல்களைக் குறைத்து, அவர்கள் உத்தியோகபூர்வ பொருளாதாரக் கட்டமைப்பில் இலகுவாக இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!

November 11, 2026
பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 11, 2026
இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!
செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!

November 11, 2026
யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!

November 11, 2026
குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்
செய்திகள்

குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்

November 11, 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

November 11, 2026
Next Post
கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!

கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு