இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சங்கராஜ மாவத்தை, கெத்தாராம சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையினால் கொழும்பின் பல பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளநீர் தேங்கியுள்ள வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.







