கொழும்பு போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில் மாணவிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(11) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, காயமடைந்த 11 பேரும் நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-467.png)
பாடசாலையில் கெடட் பயிற்சி இடம்பெற்ற போது, முன்னாள் மாணவர் ஒருவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் குழுவொன்று மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.