Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் காட்டுயானைகளால் பல ஏக்கர் வயல்நிலங்கள் சேதம்; தொடர்ந்து பாதிக்கப்படும் மக்கள்

மட்டக்களப்பில் காட்டுயானைகளால் பல ஏக்கர் வயல்நிலங்கள் சேதம்; தொடர்ந்து பாதிக்கப்படும் மக்கள்

1 year ago
in செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் ( 12) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர் வயல்நிலங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் இப்பகுதி மக்கள் தொடர்ந்து யானைகளின் அச்சுறுதலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன.

அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையில் எஞ்சியுள்ளதை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதற்காக வேண்டி இரவு முழுவதும் நடு நிசியிலிருந்து காட்டு யானைகளிடமிருந்து தமது நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

தமது வயற் பகுதியை அண்மித்துள்ள சிறிய சிறிய பற்றைக் காடுகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் இவ்வாறு காட்டுயானைகள் தங்கி நின்று இரவு வேளைகளில் வயல் நிலங்களுக்குள் உட்புகுந்து விளைந்த வயல்நிலங்களை துவம்சம் செய்து வருவதனால் தமது இவ்வருடத்தின் வாழ்வாதாரம் தொழில் இன்னும் பாரிய நட்டத்தை ஏற்படுத்துவதாக நெற்பயிரை இரவு வேளையில் யானைகளின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கதற்காக காவல்காக்கும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வெள்ளத்தில் அள்ளுண்டு போனதில் எஞ்சியுள்ள நெற்பயிரை இரவு பகலாக கண் விழித்திருந்து அறுவடை செய்ய வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நிண்ட காலமாகவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதுடன், யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருப்பதற்காக யானைப் பாதுகாப்பு வேலைகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் அது இதுவரையில் நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

July 2, 2026
விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்
செய்திகள்

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

July 2, 2026
இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்
செய்திகள்

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

July 2, 2026
திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

July 2, 2026
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!
செய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

July 2, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

July 2, 2026
Next Post
வாகரை கடற்கரையில் கரையொதுங்கிய பொருள்

வாகரை கடற்கரையில் கரையொதுங்கிய பொருள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.