பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது “கணேமுல்ல சஞ்சீவ” இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, சந்தேக நபர் ஒரு துளையிடப்பட்ட சட்ட புத்தகத்திற்குள் மறைத்து, துப்பாக்கியின் வடிவத்தில் பக்கங்கள் வெட்டப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், துப்பாக்கிதாரி இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் புத்தகத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டும் சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.