கிழக்கு மாகாணத்தில்உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.
26ஆம் திகதி மகா சிவராத்திரி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் 27ஆம் திகதி கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பாடசாலை 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 27ஆம் திகதி முஸ்லிம்,சிங்கள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.