Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; இருவர் கைது

உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; இருவர் கைது

2 years ago
in செய்திகள்

கொழும்பு- மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மாலபே காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹோகந்தர, விஸ்கம் மாவத்தையில் நேற்றிரவு (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றிரவு மாலபே காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று, சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, ​ மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த மோட்டார் வாகனம், திடீரென பின்னோக்கி பயணித்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரி அதன் சக்கரங்களில் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பின்னர் மோட்டார் வாகனம் அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதி நின்றுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, ​​சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.800 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், போதைப்பொருட்களை கொண்டு சென்ற 30 வயதான ஆண் ஒருவரும், 33 வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தெல்கொட பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையின் போது, ​​சந்தேகநபர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ கிராம் கேரள கஞ்சாவும், அதனை அளவிட பயன்படுத்தப்பட்ட தராசும் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மாலபே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு