Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்று பாணமை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள், கடந்த 22ஆம் திகதி களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது. இதையடுத்து, அதன் உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பல்வேறு பகுதிகளுக்கு தகவல் வழங்கியதன் பின்னர், பாணமை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் மோட்டார் சைக்கிளை மீட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபர் அதன் இலக்கத் தகட்டை மாற்றி கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் ரூ.8 இலட்சத்து 90 ஆயிரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாகப் பூட்டிவைத்து நிறுத்துவதுடன், மோட்டார் சைக்கிள்களுக்கு கூடுதல் பாதுகாப்புப் பூட்டுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு