கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பகுதியில் வீடு ஒன்றில் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், உயிரிழந்தவர் கம்பளை, கீரப்பனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஒருவர் வீட்டில் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், அவரை உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் பின்னர், கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








