அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய ட்ரம்ப் USAID அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து USAID ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வொஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர் இந்த தடையை வொஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ் நீக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பைச் சேர்ந்த சுமார் 2000பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும் விடுமுறையில் அனுப்புவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.