Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வறண்ட வானிலை நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்; மின்சக்தி அமைச்சர்

வறண்ட வானிலை நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்; மின்சக்தி அமைச்சர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் சந்திப்பில் நேற்று (23) பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மின்சார சபை எப்போதும் 140 பில்லியன் ரூபாய் இலாபம் என்று கூறுகிறது. எப்போதும் அந்த பொய்யைச் சொல்கிறார்கள். மின்சார சபைக்கு இலாபம் இல்லை, ஒவ்வொரு காலாண்டிலும் விலை மாறும்போது ஒரு மீதி வருகிறது.

முந்தைய 6 மாதங்களின் மீதியை அடுத்த 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்கிறோம். அதன் மூலம்தான் ஒரு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.

அந்த முன்னறிவிப்பைச் சொல்லும்போது, மீதமுள்ள தொகையை செலவு செய்த பின்னரே எடுக்கிறோம். அதனால் ஆண்டு முடிவில் இலாபம் எதுவும் மீதியாக இருப்பதில்லை.

கடந்த ஆண்டு 140 பில்லியன் இருந்தது, அது செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் 46 பில்லியன் மட்டுமே மீதியாக இதற்கு வந்தது. அந்த 46 பில்லியனை இதில் சேர்த்தால், இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என்றார்.

Tags: BattinaathamnewsbattinewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
Next Post
கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு