இந்த வாரம் ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ என்று அறிவிக்கப்படும் என பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை காரணமாக நேற்று (24) முதல் மார்ச் 2 வரை ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ அறிவிக்கப்பட்டுள்ளதாக புதிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ விபத்துகள் ஏற்பட்டவுடன் அவற்றை அணைப்பது கடினம் என்றும், அந்த தீ விபத்துகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தை மீட்டெடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த காட்டுத் தீ பல்வேறு மனித நடவடிக்கைகளின் விளைவாகவே ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.