உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேசமயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அத்தோடு 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை விரைவில் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட துணை மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
