2023 க.பொ.த உயர்தரத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் பீட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (02) ஞாயிற்றுக்கிழமை மட்/பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு T.அருள்ராஜா D.E.O போரதீவு பற்று கோட்டக்கல்விபணிப்பாளரும், செட்டிபாளையம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக . கே.மகேசன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது மாணவர்களுக்கு அதிதிகளால் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு கே.ஹரிஹரராஜ், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு . கே. அர்ச்சனா (BSC) ஆசிரியர், BT/BC/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி. கே. அர்ச்சோபனா (BSC) ஆசிரியர்,BT/BW/கரடியனாறு M.V மற்றும், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

புலமைப்பரிசில்உதவித்தொகை நன்கொடையாளர்களாக,
பரமேஸ்வரன் “சிவகாமி அறக்கட்டளை”, லண்டன், நிர்மலன், “ரெயின்போ பவுண்டேஷன்”, லண்டன், சோமாஸ்கந்தன், “சிவலிங்கம் அறக்கட்டளை”, கான்பெரா, ஆஸ்திரேலியா.வை. கிரிசாந்த், கொழும்பு கே. அர்ச்சனா (BSC), முனைக்காடு, கொக்கட்டிச்சோலை கே. அர்ச்சோபனா (BSC), முனைக்காடு, கொக்கட்டிச்சோலை போன்ற அமைப்புக்களின் நிதி அனுசரணையில் புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

