Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காரைதீவு பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டு

காரைதீவு பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்றையதினம்(4) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக இன்று(5) காரைதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரமழான் நோன்பு காலம் என்பதால் வீட்டின் உரிமையாளர்கள் இரவு வணக்க வழிபாட்டிற்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு சென்று இரவு 12 மணியளவில் உறங்கிய வேளை குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் அதிகாலை வேளை குறித்த வீட்டின் உரிமையாளர் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி மற்றும் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து பின்னர் வீட்டை சோதனை செய்த வேளை வீட்டு உரிமையாளர் தங்க நகைகள் பணம் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் வழிகாட்டுதலில் காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

September 14, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!
காணொளிகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்
அரசியல்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

September 14, 2026
“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
அரசியல்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

September 14, 2026
Next Post
உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு