Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையில், 43 வயதுடைய உகண்டா பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் முதலில் உகண்டாவில் இருந்து கட்டாருக்குச் சென்றுள்ளதுடன், அங்கிருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR-664 விமானம் மூலம் நேற்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், அவர் நேற்று மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் உருண்டைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரின் உடலில் எஞ்சியுள்ள போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, அவரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

September 14, 2026
ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!
காணொளிகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்
அரசியல்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

September 14, 2026
“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
அரசியல்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

September 14, 2026
Next Post
ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு