இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மண்ணில் நடைபெற்ற கடற்கரை கபடி போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி வாகை சூடியது.
இக் கபடி போட்டிகளை CPIM 24 சம்மெளனம் நடாத்தியிருந்ததுடன், குறித்த போட்டி நிகழ்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றுயிருந்தன.
இம் மூன்று சுற்றிலும் மட்டக்களப்பு கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு கழகம் வெற்றி பெற்றதுடன், முதல் சுற்றில் 30:21 என்னும் வித்தியாசத்திலும், இரண்டாம் சுற்றில் 35:15 என்னும் வித்தியாசத்திலும், இறுதி சுற்றில் கேரளா அணியுடன் மோதி 40:24 என்ற வித்தியாசத்திலும் புள்ளிகளை பெற்று வெற்றி ஈட்டியது.

எமது நாட்டுக்கும், மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்த கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணியினருக்கு battinaatham ஊடகம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, குறித்த வரலாற்றுச் சாதனையை அடைவதற்கு உறுதுணையாக நின்று செயற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள், கழக நிர்வாகத்தினருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.

அதேசமயம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர்
சிறிநாத் அவர்களும் குறித்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தத்துள்ளதுடன், குறித்த இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் அனுராதபுர மகளிர் அணியும் பங்கு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
