பெங்களூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (3) ரன்யா ராவ் 14.8 கிலோ தங்கம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 15 நாள்களில் ரன்யா ராவ் நான்கு முறை டுபாய்க்குப் பயணம் செய்துள்ளார். இதனால், அவர் தனியாக தங்கம் கடத்தினாரா? அல்லது அவருக்குப் பின்னால் யாரும் உள்ளனரவா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுடன் வாகா திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.