Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு ரணில் ஆதரவு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு ரணில் ஆதரவு

2 years ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று புதன்கிழமை (5) கொழும்பு பிளவர் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன், செயலாளர் பிரபாத் சுகததாச, பொருளாளர் பண்டார வரகாகொட மற்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குழு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், அரசாங்க மருத்துவர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பொது நிர்வாக அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சமரதுங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரச வைத்தியர்களின் சம்பளம், மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு, விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழில் புரிவதற்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது ‘உங்களைப் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் அது சிறப்பானது.’ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் குறிப்பிட்டுள்ளது.

‘வேண்டாம். நான் தற்போது ஓய்வெடுக்கின்றேன். ஆனால் உங்களுக்குத் தேவையான எந்தவொரு ஆதரவையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
மொட்டுக் கட்சியின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக மதன் நியமனம்

மொட்டுக் கட்சியின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக மதன் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு