Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்; மீறினால் அனுமதி இரத்து

வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்; மீறினால் அனுமதி இரத்து

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் வாகனங்களின் சேமிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தனிப்பட்ட ரீதியாக வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்க நிதிக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

2020 ஆம் ஆண்டில் வாகனங்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்காலிக இடைநிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கான அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைவாகவே வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது. HS குறியீடு 304 இன் கீழ் உள்ள வாகனங்கள் இலங்கைக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் CIF-இல் 3% அபராதம் விதிக்கப்படும், அதிகபட்சம் 45% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அளவில் 25% வீதமானவை 6 மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அவர்களின் இறக்குமதி நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும். அந்த நிபந்தனைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் அனுமதி இடைநிறுத்தப்படும்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
Next Post
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு