மட்டக்களப்பு இருதயபுரத்தில் அமைந்துள்ள திரு இருதயநாதர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் இரத்ததான நிகழ்வு நடாத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில் தவக்காலத்தை முன்னிட்டு இந்த வருடமும் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த தவக்கால இரத்ததான நிகழ்வானத்து கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நேற்று (09) திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வை பங்குத்தந்தை அருட்திரு கிலமன்ட் V. அன்னதாஸ் அவர்களின் இறை ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டு நேற்று (09) நண்பகல் பன்னிரண்டு முப்பது மணி அளவில் நிறைவடைந்தது.


