Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பாலர் பாடசாலை ஆசிரியரிடம் தர்க்கம்; களுவாஞ்சிகுடியில் சம்பவம்

தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பாலர் பாடசாலை ஆசிரியரிடம் தர்க்கம்; களுவாஞ்சிகுடியில் சம்பவம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் கொகுதியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அக்கட்சிக்காகச் செயற்பட்டு வந்த அலெக்சாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் நேற்று (11) மாலை களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது,

அலைக்ஸாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் மாத்தளையைச் சேர்ந்தவர் எனவும், தான் பல்கலைக் கழகம் ஒன்றில் விரிவுரையாளராக செயற்பட்டு, தேசிய மக்கள் சக்திக்காக அதனையும் துறந்துவிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதி மக்களுக்காக வந்து சேவை செய்து வருவதாகம் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இப்பகுதியில் அக்கட்சிக்காக செயற்பட்டு வந்தவராவார்.

இந்த நிலையில் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றிற்குள் குறித்த அலைக்ஸ் என்பவர் நேற்றைய தினம் (11) புகுந்து, ஏன் பிள்ளைகள் இன்றையதினம் குறைவாக வந்துள்ளார்கள், என்ன காரணம் என கேட்டு, அங்கிருந்த பாலர் பாடசாலை ஆசிரியையுன் தர்க்கம் புரிந்து, தகாத வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.

மேலும் நீங்கள் எடுத்த வீடியோவை வெளியிட்டால் உம்மை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவேன் எனவும் அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியை அவரது செயற்பாடுகளை தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார் இதன்போது ஆசிரியையை அலெக்ஸ் தாக்க முற்பட்டுள்ளார்.

அதன்போது அலைக்ஸின் கைவிரல் நகம் ஆசிரியையின் கையில் கிளித்துள்ளதாக குறித்த ஆசிரியை தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் ஆசிரியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இது அவ்வாறு இருக்க குறித்த ஆசிரியை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் பட்டிருப்பு தொகுதிக்குரிய தேசிய மக்கள் சக்தியின் கட்சி அமைப்பாளராக தவஞானசூரியம் என்பவர் காணப்படுவதுடன், அலெக்ஸ் என்பவர் தமது கட்சியின் அத்தொகுதிக்குரிய அமைப்பாளர் இல்லை. மாறாக எமது கட்சிக்காக தேர்தல் காலத்தில் அங்கு வந்து வேலை செய்தவர்தான். ஆனால் அவரை தேர்தல் முடிந்த கையோடு அவரை அவருடைய மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டோம். அதனையும் கடந்து அவர் இப்பகுதியில் நின்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க அலெக்ஸாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் தேசிய மக்கள் சக்தி கட்சியினால் பட்டிருப்பு தொகுதிக்காக உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர் இல்லை அவர் தன்னிச்சையாகவே அத்தொகுதிக்கு வந்து, செயற்பட்டு வந்தாக அக்கட்சியைச் சேர்ந்த மற்றுமொருவரும் தெரிவித்திருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
Next Post
மகிந்த யாப்பா அபேவர்தன,அஜித் ராஜபக்ச, அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு எதிராக விசாரணை

மகிந்த யாப்பா அபேவர்தன,அஜித் ராஜபக்ச, அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு எதிராக விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு