மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட – ஏறாவூர் பற்று செங்கலடி ஐயங்கேணி பாரதிபுரம், ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்து சமய கலாசார அலுவலக திணைக்களம் ஒழுங்கு செய்து நடாத்திய தேசிய மட்ட ஆக்க திறன் விருது போட்டி 2024இல் – குழு நடன போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவிகளை அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாசிரியர் சிவஸ்ரீ க.சுவர்ணேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலுடன் அறநெறிப் பாடசாலை ஆசிரியர் செல்வி.நிதாயினி கந்தசாமி அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை இம்மாணவிகளுக்கு கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளதுடன் பாராட்டுக்களும் வெகுவாக குவிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.