Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

2 years ago
in செய்திகள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நான் மதியம் 3:30 மணியளவில் வேலையிலிருந்து வீடு திரும்பி, விடுதிக்கு வந்தேன். அதன் பிறகு, நான் ருவன்வெளி மஹா சேயவிற்கு வழிபடச் சென்றேன்.

மாலை சுமார் 6:30 மணியளவில் நான் விடுதிக்கு திரும்பினேன். நான் என் விடுதி அறைக்குள் நுழையப் போகும் போது, ​​யாரோ என் பின்னால் வருவது போல் உணர்ந்தேன். ​​

என் அறைக்கு எதிரே உள்ள அறையின் வாசலில் இருந்த ஒருவர் என் கழுத்தில் கத்தியை வைத்து கதவைத் திறக்கச் சொன்னார். நான் கதவைத் திறந்தவுடன், அவர் என்னைத் தள்ளிவிட்டு, ஒரு டி-ஷர்ட்டால் என் வாயை மூடினார்.

பின்னர் என் அறையின் கதவை மூடிவிட்டு, விளக்குகளை போட்டு, எல்லா இடங்களிலும் பார்த்தார். பிறகு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு குளியலறை விளக்கை மட்டும் போட்டார்.

நான் இராணுவத்திலிருந்து தப்பி வந்துவிட்டேன். பொலிஸார் என்னைத் தேடுகிறார்கள். சிறிது நேரம் மறைந்திருக்க அனுமதிக்குமாறு கேட்டார். இங்கேயே இருக்க விடுங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டேன் என்றார். ஆனால் கத்தினால் தொண்டையை அறுத்துவிடுவேன் என கூறினார்.

அவர் என் அருகில் அமர்ந்து, என கைகளை முன்னோக்கி நீட்டுமாறு கூறி கட்டி வைத்தார். வாயை ஒரு துணியால் மூடினார். எனது கையடக்க தொலைபேசியை வழங்குமாறு கேட்டார்.

என் தொலைபேசியை எடுத்து, எனக்காக ஒரு இந்தி பாடலை போடுமாறு கேட்டார். நான் பாடலை போடாமல் அவருடன் போராடினேன். எனது கையில் கத்தி வெட்டுக்காயம் ஏற்பட்டது.

அவர் என்னைக் கொன்றுவிடுவார் என பயந்து அவர் சொன்னதை நான் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

அவர் அனைத்தை முடித்துவிட்டு எனது தொலைபேசியிலேயே என்னை புகைப்படம் எடுத்தாார். நான் கைடயக்க தொலைபேசியை கொண்டு செல்கிறேன். நடந்த விடயங்களை வெளியே கூறினால் உங்களுக்கு தான் பிரச்சினை மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

என் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. நான் அவற்றை அவிழ்த்த போது, ​​அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. ஒரு ஜன்னல் திறந்திருந்தது.

அசௌகரியத்தைத் தாங்க முடியவில்லை, அதனால் நான் குளித்தேன், பின்னர் விரைவாக மருத்துவரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அவரும் தனது தந்தையிடம் தொலைபேசியில் கூறினார்.

பின்னர் சம்மாந்துறை மருத்துவமனையில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் கூறினார்.” இதற்கிடையில், சந்தேக நபரைத் தேடி 5 பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன. என கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
Next Post
இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.