Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

1 year ago
in செய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் குழப்பம் விளைவித்த சந்தேக நபரை, தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

சுவீடன் மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் (09) அதிகாலை 12.45 மணியளவில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, ​​குடிபோதையில் இருந்த சந்தேக நபர், இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் சீண்டல் செய்ததாகவும், மற்ற பயணிகளை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

இதன் காரணமாக விமானத்தில் பணியிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரைக் கட்டுப்படுத்தியதாகவும், பின்னர் அது குறித்து விமானிகளுக்குத் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய பொலிஸாரால் சந்தேக நபரான தமிழர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கிய விமான நிலைய பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபர் அதிகளவு மது அருந்தியிருந்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
Next Post
போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்ற அவுஸ்திரேலிய டெஸ்ட் முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்ற அவுஸ்திரேலிய டெஸ்ட் முன்னாள் கிரிக்கெட் வீரர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு