Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாதாரணதர பரீட்சை நிலையத்திற்குள் கையடக்க தொலைபேசிகள் கொண்டுசெல்வதற்குத் தடை

சாதாரணதர பரீட்சை நிலையத்திற்குள் கையடக்க தொலைபேசிகள் கொண்டுசெல்வதற்குத் தடை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நாடாளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் 4,74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3,98,182 பரீட்சார்த்திகள் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும், 75,965 பரீட்சார்த்திகள் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 3,663 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அனைத்து பரீட்சார்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரக்க சுமேதா வித்தியாலயத்தில் சிறைக்கைதிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரம் உள்ளிட்ட கையடக்க தொலைபேசிகளுடன் இணைக்கக்கூடிய அனைத்து உபகரணங்களைப் பரீட்சை நிலையத்திற்குள் கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் நேரம் தாழ்த்தி பரீட்சை நிலையத்திற்குச் செல்லும் நிலைமையினை கடந்த காலங்களில் காணமுடிந்தது.

எனவே, இந்த நிலைமையினை தவிர்த்து அனைத்து பரீட்சார்த்திகளும் உரிய நேரத்திற்குப் பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு மீனவரிடம் 30000 கப்பம் வாங்கிய பொலிஸார்-அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்
காணொளிகள்

மட்டு மீனவரிடம் 30000 கப்பம் வாங்கிய பொலிஸார்-அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

June 9, 2026
கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு
செய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு

June 9, 2026
நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!
செய்திகள்

நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!

June 9, 2026
நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!
செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!

June 9, 2026
தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
Next Post
வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு