Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டலந்த விவகாரத்தில் ரணிலை கைது செய்வது முடியாத காரியம்; உதய கம்மன்பில

பட்டலந்த விவகாரத்தில் ரணிலை கைது செய்வது முடியாத காரியம்; உதய கம்மன்பில

1 year ago
in செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமற்றது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் 3ஆவது அத்தியாயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கிளர்ச்சிகள் குறித்துப் பேசுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இந்த அறிக்கையை அமைச்சரவை அனுமதி ஊடாக ஏற்றுக்கொள்ளுமானால் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி இடம்பெற்றுள்ளது என்பதனை ஏற்பதாகும்.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய அமைச்சர் விஜயபால மெண்டிஸ் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி பட்டலந்த அறிக்கையைச் சபையில் முன்வைத்தார்.

அவ்வாறு இல்லை எனப் பொய் கூறும் அரசாங்க தரப்பினர் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஹன்சாட்டின் ஆயிரத்து 581ஆவது பக்கத்தைப் பார்ப்பார்களானால் அதற்கான சாட்சியினை பெறமுடியும்.

ஆகவே, பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யவோ அல்லது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது.

1948 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவுக்கே நீதிமன்ற அதிகாரம் காணப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவால் நபரொருவர் குற்றமிழைத்தாரா? இல்லையா? என்பதனை தீர்மானிக்க முடியும். அவ்வாறு எனில், திசைகாட்டியின் பொய் பிரசாரத்தில் புதிதாக ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையும் இணைந்துள்ளது” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
இலங்கையில் அனைத்து இனத்தவர்களிடத்திலும் சிறுவயது திருமணம் நடக்கின்றது; எம்.பி முஜிபுர் ரஹ்மான்

இலங்கையில் அனைத்து இனத்தவர்களிடத்திலும் சிறுவயது திருமணம் நடக்கின்றது; எம்.பி முஜிபுர் ரஹ்மான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு