எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மாபெரும் மக்கள் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷவும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ஷ பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நோச்சியாகம பிரதேச சபை உறுப்பினர் செனிவிரத்ன ஜெயவர்தன, கட்சியின் தலைமைப்பீடம் இந்த விடயத்தை தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், லிமினி ராஜபக்ஷவின் பேரணி பங்கேற்பு கட்சி ஆதரவாளர்களுக்கும் கட்சிப் போராளிகளுக்கும் மேலும் உற்சாகத்தையும் பலத்தையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பேரணி கட்சியின் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் முக்கிய அரசியல் நிகழ்வாக அமையும் எனவும் கட்சி தரப்பில் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







