Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” விவகாரம்; வியாழேந்திரன்-பிள்ளையான் மீது எழுந்துள்ள கண்டனம்

“கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” விவகாரம்; வியாழேந்திரன்-பிள்ளையான் மீது எழுந்துள்ள கண்டனம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் செவ்வாய்கிழமை(18) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 15.03.2025 அன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முறையே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்துள்ளனரென்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் தமிழர் முற்போக்குக் கழகத்தின் செயலாளர் ரோஸ்மன் ஆகிய இருவரும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின்” அரசியல் பிரிவாகக் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆகிய எனது தலைமையில் 2018 இல் உருவாகி அதற்குத் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதத் தொடர்பாடல்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் பத்திரிகைச் செய்திகளும் பத்திரிகை அறிக்கைகளும் தேர்தல் பிரசாரத் துண்டுப் பிரசுரங்களும்கூட வெளியாகியிருந்தன.

இந்த விடயங்களெல்லாம் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறியப்பட்டவையாகவிருந்த போதிலும்கூட மேற்படிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் அதுபோல் தமிழர் முற்போக்குக் கழகத்தின் செயலாளரும் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காக எடுத்தாண்டுள்ளனர்.

இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம்.

மேலும் இக்கூட்டுக்கும் எனது தலைமையில் 2018 இல் உருவான ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” க்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்பதையும், பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஏனையோருக்கும் அறியத் தருகின்றேன். 18.03.2025 தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
“உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம்

“உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.