2024ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவர்களுக்கும் உரிய அதிபர்களுக்கும் கல்வியமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை அதிபர்கள் 2025.03.25 ஆம் திகதிக்கு முன்னர் நிகழ்நிலை முறையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் அதிபர்களுக்கு உரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ் விண்ணப்பப் படிவத்தை தரம் 05 இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடமிருந்து பெற்று பெற்றோர் அதனை முறையாக பூரணப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அதிபரிடம் மீண்டும் கையளிக்க வேண்டும் எனவும் பாடசாலை அதிபர்கள் உரிய திகதிக்கு முன்னர் நிகழ்நிலை முறையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.