Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

1 year ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது .

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி, உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் முகமாக தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும் நினைவு கூறப்பட்டது

பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயசூரிய சிந்தனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்ற நிகழ்வின் கீழ் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர ஆலோசனையின் கீழ் தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் சுமார் 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களை நினைவு கூறும் நிகழ்வாக தேசிய ரீதியில் வருடந்தோறும் மார்ச் மாதம் அனுச்டிக்கப்படுகின்றது .

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார் .

அன்று முதல் இன்று வரை 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களை நினைவும் கூறும் முகமாக வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நினைவு கூறும் நிகழ்வானது , கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொலிஸ் திணைகள் கொடியேற்றப்பட்டு இறந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவுகளால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, தொடர்ந்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர விசேட உரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறவுகள் என பலர் கலந்து கொண்டனர்.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் இலங்கையில் உயிரிழந்த 5759 பொலிஸ் உத்தியோகத்தர்களில் கிழக்கு மாகாணத்தில் 417 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
Next Post
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.