2025 பெப்ரவரி முதலாம் திகதி இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து இலங்கை வாகன இறக்குமதிக்காக 207 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் நேற்று (21) இதனை குறிப்பிட்டுள்ளார்.
207 மில்லியன் டொலர் மதிப்புள்ள நாணயக் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் வாகன இறக்குமதிக்காக இந்த ஆண்டு 1 பில்லியன் டொலர் வரை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு இருப்புக்கள் மீது அழுத்தம் கொடுக்காமல் இறக்குமதி இலக்குகள் அடையப்படுவதை உறுதிசெய்ய தினசரி கண்காணிப்பு நடந்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வாகன இறக்குமதிகள் மூலம் இதுவரை 20 வீத இலக்கு அடையப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேவையான வரி வருவாயை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.