மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் 02/04/2025 அன்று ஆரம்பமாகவுள்ளது.
திருவிழா 10 நாட்களும் பிரம்மோற்சவ பெருவிழா பூஜை வழிபாடுகளும் இடம்பெறவுள்ள.
08/04/2025 செவ்வாய்க்கிழமை எம்பெருமானுக்குரிய திரிசூல வேட்டைத்திருவிழா ஆலய முன்றலிலே மாலை 2 மணியளவில் ஆரம்பமாகும்.
09/04/2025 புதன்கிழமை மாலை பிரம்மோற்சவ பூஜை வழிபாடுகளில் எம்பெருமான் பாலீஸ்வரர் மற்றும்
பரிபார எழுந்தருளி விக்கிரங்களான பிள்ளையார் , முருகப்பெருமான் தனித்தனி முத்துச்சப்பரத்திலே எழுந்தருளும் காட்சி அன்றைய தினம் மாலை இடம்பெறும்.

10/04/2025 வியாழக்கிழமை எம்பெருமானின் இரதோற்சவம் என்றழைக்கப்படும் தேர்த்திருவிழா காலை 6 மணியளவிலே பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும். எனவே எம்பெருமான் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரராக காட்சி தரும் தேர்ப்பவனி ஆலய வெளி வீதியூடாக வலம் வந்து பின்னர் நகர்வலமாக எமது கிராமத்தை வலம் வரும் தேரிலே வடம் பிடிக்க கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியவர்கள் அனைவரையும் வருக வருக வருக என அன்புடன் அழைப்பதாக ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேசமயம் 11/04/2025 வெள்ளிக்கிழமை பாசிக்குடா சமூத்திர தீர்த்தோற்சவத்துடன் இனிதே எம்பெருமானின் திருவிழாக்கள் நிறைவு பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
