பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி பயணமாகிய ஹசாரா எக்ஸ்பிரஸ் என்ற தொடரூந்து தடம் புரண்டதில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது புகையிரதத்தின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
திடீரென இடம்பெற்ற விபத்து காரணமாக, அந்தப் பாதையினூடான போக்குவரத்துகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 275 கிலோமீற்றர் தொலைவில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.