கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
வட அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்புகளை அவதானிக்குமாறு அறிவுறுத்தல்
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களும் கடற்றொழிலாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த எச்சரிக்கை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நிலைமைகள் தொடர்பான மேலதிக தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








