அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கல்முனை கிளைத் தலைவராக, கல்முனையைச் சேர்ந்த சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைக்கான வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நேற்று (2026.10.27) சம்மாந்துறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், சங்கத்தின் தலைவராக டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் தெரிவு செய்யப்பட்டார்.
டாக்டர் மாஹிர், நீண்டகாலமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைத் தலைவராகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








