Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

1 year ago
in செய்திகள்

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை சக ஊழியர்கள் நேற்று (08) இரவு வீட்டுக் காவலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை தொழிற்சாலையின் நுழைவு வாயிலை பூட்டி முற்றாக அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட சுங்கவரி காரணமாக , தொழிற்சாலை நிர்வாகம் போனஸ் வழங்கப்படாது என அறிவித்ததைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், “புது வருட போனஸ் வழங்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தொழிற்சாலை நிர்வாகம் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் , இன்று (09) காலை வரை தொழிலாளர்கள் தொழிற்சாலையின் நுழைவு வாயிலை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்க முடிவு செய்து, கடந்த ஏப்ரல் 02 அன்று அறிவித்தார்.

இந்த சுங்கவரி ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதன் தாக்கம் ஆடைத் தொழிற்துறையை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இதனால் போனஸ் உள்ளிட்ட நிதி உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.