2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியுதவி அளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்று முன்தினம் 08) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன மகேந்திரனை நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படியில் ரணில் நிதியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தேடப்பட்டு வருகின்றார்.
எனினும், இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என ஜகத் விதான சுட்டிக்காட்டியுள்ளார்.