Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

1 year ago
in செய்திகள்

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுவின் உரிமையாளர் குறித்த பிரதேச செயலக நுழைவாயிலை வழிமறித்து இன்றையதினம்(09) போராட்டமொன்றை முன்னெடுத்ததால் குறித்த பகுதியில் சிலமணி நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை மையமாக கொண்டு சுயதொழிலாக பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசுமாடு ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்களால் குறித்த பசுமாடு பிடிக்கப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கையான உரிமையாளர் தேடிவரும்வரையான சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் குறித்த பசுமாடு இருப்பதை அறிந்துகொண்டு அதை பிரதேச சபை சட்டமுரணாக பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பில் பசுவின் உரிமையாளரான குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில்,

தான் மாடு வளர்ப்பு தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு மாடுகளின் நலன் கருதி அவற்றை அவிழ்த்து விட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு மாடு குறித்த பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்றதாக கூறி பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது.

எனவே சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டங்கள் இன்றி விடுவிக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறு மாடுகள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது,

எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளும் நாளாந்தம் காணப்படுகின்றது.

குறிப்பாக வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50 க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள் மற்றும் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அல்லது நுழைந்தால் பிடிப்பதற்கும் அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் உண்டு.

இதேவேளை குறித்த பெண் இவ்வாறான சம்பவம் தொடர்டபில் பலமுறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியும் ஒரு தடவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு தண்டமும் செலுத்திய ஒருவர்.

அவ்வாறான சம்பவம் ஒன்றே இன்றும் நடந்துள்ளது. நாம் சட்டத்தை தான் செய்தோம். எவரது கால்நடைகளும் இன்னொருவரது வீடுகளுக்கோ அல்லது பொது நிறுவனங்களின் வளாகத்துக்குள்ளோ சென்றால் அல்லது நாசங்களை ஏற்படுத்தினால் அதை பிடித்து அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்து விடுவது இவ்வாறான பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துடன் குறித்த பசு மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம் அதற்கான தண்டப்பணமாக 5600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.