2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இம்முறை பரீட்சைக்கு மொத்தமாக 294,089 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
இதில் சிங்கள மொழி மூலம் 220,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.








